ADDED : ஜூன் 03, 2025 07:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே நாயுடுகுப்பம் கிராமத்தில், நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த இரு டிராக்டர்கள், சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது.
அதிலிருந்து இறங்கிய ஓட்டுனர்கள் தப்பியோடினர். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.