/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாரம்பரிய சிறுதானிய உணவு கண்காட்சி
/
பாரம்பரிய சிறுதானிய உணவு கண்காட்சி
ADDED : நவ 05, 2024 11:18 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நேற்று பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழா நடந்தது. மகளிர் சுய உதவிகுழுவினர் காட்சிப்படுத்தப்பட்ட சிறு தானிய உணவுகளை கலெக்டர் பிரபுசங்கர் ருசி பார்த்தார்.
கலெக்டர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்ட அளவிலான பாரம்பரிய சிறுதானிய உணவு திருவிழாவில் மகளிர் சுய உதவி குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. சிறுதானிய உணவு பொருட்கள் அனைத்தும் சுவையாகவும், தரமாகவும் உள்ளது. இதன் நோக்கம், மக்களிடையே சிறுதானிய உணவுகளை உட்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே. சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை கொண்டு சுய உதவி குழுவினர் திறமைகளை வளர்த்து வாழ்வில் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் மூன்று இடத்தை பெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.