/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை
/
செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை
ADDED : ஜன 12, 2024 10:22 PM
சென்னை:தேனாம்பேட்டை, செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறிகள் விற்பனை நிலையம் இன்று துவங்கப்பட உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில், அதலைக்காய், மூக்குத்தி அவரை, கண்ணாடி கத்திரி, உருட்டு வெண்டை, சிறகு அவரை, டைகர் பீன்ஸ், நீள தட்டை பயிறு, நெய் மிளகாய், சாத்துார் வெள்ளரி உள்ளிட்ட, 37 வகையான பாரம்பரிய காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறை மானிய உதவிகளை வழங்கி வருகிறது. அவற்றின் விற்பனையை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, சென்னை, தேனாம்பேட்டை, செம்மொழி பூங்காவிலும் சிறப்பு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று விற்பனை துவங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை இயக்குனர் பிருந்தாதேவி கூறியதாவது:
செம்மொழி பூங்காவில், வாரம்தோறும் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் பாரம்பரிய காய்கறிகள் விற்பனை நிலையம் செயல்படும். பாரம்பரிய காய்கறிகள் மட்டுமின்றி பலா பிஞ்சு, தேங்காய் பூ, அரிய வகை கீரைகள், சீசனுக்கு ஏற்ப இங்கு விற்கப்படும்.
விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து, வாகன வாடகை மட்டும் கணக்கிட்டு, லாபம் நோக்கமின்றி விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.