/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ஆக்கிரமிப்புகளால் நிலவும் போக்குவரத்து நெரிசல்
/
திருத்தணியில் ஆக்கிரமிப்புகளால் நிலவும் போக்குவரத்து நெரிசல்
திருத்தணியில் ஆக்கிரமிப்புகளால் நிலவும் போக்குவரத்து நெரிசல்
திருத்தணியில் ஆக்கிரமிப்புகளால் நிலவும் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 26, 2025 05:02 AM

திருத்தணி: திருத்தணி நகரில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சிலர் வியாபாரம் செய்வதால், தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்காமல், நகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. மேலும் இங்கு முருகன் கோவில், ரயில் நிலையம், அனைத்து துறை வருவாய் கோட்ட அளவில் அரசு அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள், கல்லுாரி மற்றும் பள்ளிகள் உள்ளன.
இதனால், திருத்தணி நகருக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, திருத்தணி முருகன் கோவிலுக்கு தினசரி, பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
இதில் பெரும்பாலானோர், பேருந்து, கார், வேன், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இதனால் திருத்தணி நகரில் சித்துார் சாலை, ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை மற்றும் அக்கைய்யநாயுடு சாலை போன்ற இடங்களில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை ஆகிய இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால், மக்கள் இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் போக்கு வரத்து போலீசாரும் உடனுக்குடன் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதில்லை. மேலும், 'நோ- பார்க்கிங்' சாலையில் செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்வதற்கு உடந்தையாக செயல்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து திருத்தணி நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

