/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆற்று தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து தடை
/
கூவம் ஆற்று தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து தடை
கூவம் ஆற்று தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து தடை
கூவம் ஆற்று தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து தடை
ADDED : அக் 27, 2025 01:09 AM

மதுரவாயல்: கூவம் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தால், தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், திருவேற்காடு, வானகரம், அடையாளம்பட்டு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில், கூவம் ஆற்றில் அதிகப்படியான நீர் செல்கிறது.
இதனால், மதுரவாயல் மேம்பாலம் கீழ், கோயம்பேடு ரயில் நகர் மற்றும் நொளம்பூர் பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள், வெள்ள நீரில் முழ்கின. அதிக நீர்வரத்தால், அப்பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வழியே வாகனங்கள் செல்லாமல் இருக்க, போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்துள்ளனர்.
அதனால், நொளம்பூர் தரைப்பாலம் மற்றும் மதுரவாயல் தரைப்பாலத்தை பயன்படுத்துவோர், மதுரவாயல் சன்னிதி தெருவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.
கோயம்பேடு ரயில் நகர் தரைப்பாலத்திற்கு பதில், நெற்குன்றத்தில் உள்ள கோல்டன் மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

