/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வழி தடங்களை மறைத்து நிறுத்தும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
/
வழி தடங்களை மறைத்து நிறுத்தும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
வழி தடங்களை மறைத்து நிறுத்தும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
வழி தடங்களை மறைத்து நிறுத்தும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 28, 2024 01:53 AM

கும்மிடிப்பூண்டி:சோதனைச்சாவடியின் வழி தடங்களை மறைத்தபடி நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால், பின்னால் வரும் பிற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், சென்னை-- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் வரும் சரக்கு வாகனங்களின், ஆவணங்களை சரி பார்க்கும் பணியில், போக்குவரத்து துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைச்சாவடி வழி தடங்களை கடக்கும் போது, அங்கு அமர்ந்திருக்கும் போக்குவரத்து ஊழியர்கள், சரக்கு வாகனத்தின் ஆவணங்களை பெற்று கொள்கின்றனர்.
அந்த சரக்கு வாகனம் ஓரமாக நிறுத்திவிட்டு, ஆவணம் சரி பார்க்கும் இடத்திற்கு வர வேண்டும். ஆனால், அனைத்து வழித்தடங்களையும் மறைத்தபடி, சரக்கு வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
இதனால் பின்னால் வரும் பிற வாகனங்கள் சோதனைச்சாவடியை கடக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அலுவலர்கள், வாகனங்களின் ஆவணங்களை பெற்று கொள்ளும் போதே வாகனங்களை, ஓரமாக நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என, பிற வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

