/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்'
/
போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்'
ADDED : ஜன 30, 2025 02:04 AM

திருவள்ளூர்:வட்டார போக்குவரத்து அலுவலக சுவற்றில், போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தினமும், ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம், புதிய வாகனம் பதிவு செய்தல், பழைய வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவோர், போக்குவரத்து விதிமுறையினை கடைப்பிடிப்பது குறித்து, தினமும் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து அலுவலர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். பலர் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாயிலாகவும் உரிமம் பெற்று வருகின்றனர்.
இருப்பினும், ஓட்டுனர் உரிமம் பெற்றோர் மற்றும் புதிய வாகனம் பதிவு செய்வோர் பலரும் 'ெஹல்மெட்' அணியாமலும், கார்களில் 'சீட்பெல்ட்' அணியாமலும், வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால், விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.
இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் அனைவரும், அறிந்து கொள்ளும் வகையில், போக்குவரத்து விதிமுறை குறித்த வாசகங்கள் அடங்கிய 'ஸ்டிக்கர்'களை, அலுவலக சுவற்றில் ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

