sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'

/

 ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'

 ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'

 ரயில் பயணியருக்கு இடையூறு: மாணவர்கள் 6 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜன 11, 2026 06:30 AM

Google News

ADDED : ஜன 11, 2026 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்: ரயில் பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அநாகரிகமான வாசகங்கள் அடங்கிய பேனருடன் கும்மாளம் போட்ட ஆறு மாணவர்களை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில், நேற்று முன்தினம் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. இதில், ஆறு மாணவர்கள் ஏறினர். அவர்கள், ரயில் பெட்டியின் வழியை மறித்தபடி, கையில் பொங்கல் விழா பேனரை பிடித்தவாறு, ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளம் அடித்தனர்.

பேனரில், சென்னை பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் குறித்து, அநாகரிக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

மேலும், அவர்களின் செயல், மற்ற பயணியருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதால், அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார்விரைந்து சென்று, சென்னை மாநிலக் கல்லுாரி மாணவர்களான, கும்பினிபேட்டை சேர்ந்த ரகுபதி, 20, சிவபதி, 21, திருத்தணியை சேர்ந்த ராகுல், 18, உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

அவர்கள் வைத்திருந்த பேனரையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us