ADDED : அக் 23, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டாம் கட்டப் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, இன்று (அக்.,23) பயிற்சி அளிக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே, முதல் கட்டமாக, கடந்த செப்., மாதம், வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது.
இரண்டாம் கட்டமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி வகுப்பு, கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
அதில், பொறுப்பு அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு அலுவலர்கள், துறை சார் உதவியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் கவிதா தலைமை வகித்தார். கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு, கணக்கெடுப்பு ஆணையரக பயிற்றுநர்கள், பயிற்சி அளித்தனர்.
