/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடக்கழிவு கையாள்வது குறித்து துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி
/
திடக்கழிவு கையாள்வது குறித்து துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி
திடக்கழிவு கையாள்வது குறித்து துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி
திடக்கழிவு கையாள்வது குறித்து துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 30, 2025 12:25 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நேற்று வெங்கத்துார், மேல்நல்லாத்துார் கிராம துாய்மை காவலர்களுக்கு திடக்கழிவு கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பிரதாப் தலைமையில், கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள வெங்கத்தூர் மற்றும் மேல்நல்லத்துர் ஊராட்சியில் உள்ள கிராம தூய்மை காவலர்களுக்கு திடக்கழிவுகளை கையாள்வது குறித்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், திடக்கழிவுகளை கையாள்வது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பெங்களூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தினர் விளக்கினர். மேலும், திடக்கழிவு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது குறித்து, துாய்மை பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது.