/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரக்கோணம் ஐ.என்.எஸ்.,சில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி
/
அரக்கோணம் ஐ.என்.எஸ்.,சில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி
அரக்கோணம் ஐ.என்.எஸ்.,சில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி
அரக்கோணம் ஐ.என்.எஸ்.,சில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி
ADDED : மார் 17, 2024 12:45 AM

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. இங்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் பேரிடர் விபத்தில் சிக்குபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு, பனிப்பாறைகளில் மனிதர்கள் சிக்கி கொண்டால் அவர்களை உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. எனவே இதை அறிய மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதன்படி இங்கு, ஆண்டுதோறும் 10 -- 20 மோப்ப நாய்களுக்கு அடிப்படை செயல் திறன், மோப்ப சக்தி அதிகரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு, 'லேப்ரடார் ரெட்ரிவர்' வகையை சார்ந்த நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஓராண்டு பயிற்சி வழங்கப்பட்டு வடகிழக்கு மாநிலங்கள், இமயமலை தொடர், திபெத் எல்லைப்பகுதிகளில் இயற்கை பேரிடர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. மோப்ப நாய்களுக்கான பயிற்சியை நேற்று கமாண்டன்ட் சைலேந்திர் சிங் வழங்கினார்.

