/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி
ADDED : அக் 08, 2025 09:50 PM
பொன்னேரி:ரசாயனம் இல்லாமல் இயற்கை உரங்களை கொண்டு விவசாயம் செய்வது தொடர்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு வேளாண்மை துறையினர் பயிற்சி அளித்தனர்.
மீஞ்சூர் வேளாண்மை துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநர் டில்லிபாபு தலைமையில் பயிற்சி முகாம் நடந்தது. இதில், தனியார் பள்ளி மற்றும் கல்லுாரியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பொன்னேரி அடுத்த இலுப்பாக்கம் கிராமத்தில், 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்த விஜயகுமாரின் வேளாண் பண்ணையில் பயிற்சி முகாம் நடந்தது.
அங்கு, ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக, உயிர் உரங்களை கொண்டு இயற்கை விவசாயம் செய்வது குறித்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இயற்கை வேளாண் சந்தை ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி, டி.ஜெ.எஸ்., கல்வி குழுமத்தின் இயக்குநர் தமிழரசன் ஆகியோர், இயற்கை விவசாயம் தொடர்பாக மாணவர்கள் பேசினர்.
இயற்கை விவசாயத்தின் மூலம், உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பயிற்சியின் போது, வேளாண் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.