/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு மனை கேட்டு திருநங்கையர் முற்றுகை
/
வீட்டு மனை கேட்டு திருநங்கையர் முற்றுகை
ADDED : ஜூலை 28, 2025 11:33 PM

திருவள்ளூர், வீட்டுமனை வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கையர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட திருநங்கையர் சங்கத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட, ஒன்பது தாலுகாவைச் சேர்ந்த திருநங்கையர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, சங்க நிர்வாகிகள் சிலரை மட்டும் கலெக்டரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க வைத்தனர்.
அதன்பின், சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாவில், 650 திருநங்கையர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, வீட்டு மனை பட்டா வழங்க, 16 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
ஆனால், கலெக்டர்கள் மாறினாலும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளித்தோம்.
அப்போது, எங்கள் சங்கத்தில் உள்ள மூத்த, வயதான திருநங்கையருக்கு, முதல் கட்டமாக 196 பேருக்கு வீட்டு மனை பட்டா கோரி, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தோம்.
இன்னும் ஒரு மாதத்தில், கலெக்டர் பட்டா வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதன்பின், படிப்படியாக அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.