/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழங்குடியின மக்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
பழங்குடியின மக்கள் பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 14, 2025 02:29 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் முதல்வரின் விடியல் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 40 பழங்குடியின மக்கள் கொத்தடிமைகள் குடும்பத்திற்கு 2023ல் 4.05 லட்சம் நிதியில், 1 ஏக்கர் அரசு நிலத்தில் சிறகுகள் செங்கல் சூளை திட்டத்தை அப்போதைய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
இந்நிலையில் செங்கல் தயாரிக்க பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 8.80 லட்சம் ரூபாயில் நெற்களம் அமைக்கப்பட்டது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, பழங்குடியின மக்கள் நேற்று கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.
கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் அவர்களிடம் சமாதான பேச்சு நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

