/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகம்மாசத்திரத்தில் கழிவுநீர் கால்வாய் சேதம் குடியிருப்புக்குள் புகுந்ததால் வேதனை

ADDED : டிச 28, 2024 01:41 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது பிராமணர்தெரு. இங்கு 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் பஜார் வீதியில் உள்ள கால்வாயில் கலக்கும் படி 20 ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்கப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கழிவுநீர் கால்வாய் சேதமடைந்த நிலையில், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடுவது வாடிக்கையானது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பிராமணர் தெருவில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து குடியிருப்பு மற்றும் சாலையில் தேங்கியது.
இதனால் அப்பகுதிவாசிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் காய்ச்சல், நோய்தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.