/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சகதியான சாலையால் கூடப்பாக்கத்தில் அவதி
/
சகதியான சாலையால் கூடப்பாக்கத்தில் அவதி
ADDED : நவ 12, 2024 07:17 AM

திருவள்ளூர்: திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்டது கூடப் பாக்கம் ஊராட்சி.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இருந்து இந்த ஊராட்சிக்கு செல்லும் சாலையை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் சிறுமழைக்கே குளம் போல் மாறியுள்ளது.
இதனால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு, அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும் பள்ளிக்குசெல்லும் மாணவர்கள்சிரமப்பட்டு வருகின்றனர்.
பலமுறை ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, கலெக்டர் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.