/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரசாயன கழிவு கொட்டிய லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
/
ரசாயன கழிவு கொட்டிய லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ரசாயன கழிவு கொட்டிய லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ரசாயன கழிவு கொட்டிய லாரி தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஆக 20, 2025 11:02 PM
திருநீர்மலை:திருநீர்மலை அணுகு சாலை அருகே, புலிக்கொரடு பகுதியில் ரசாயன கழிவு கொட்டிய லாரி, திடீரென தீ பிடித்து எரிந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பம்மல், நாகல்கேணியில் தோல் தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, சட்டத்திற்கு புறம்பாக, லாரிகளில் எடுத்து சென்று, திருநீர்மலை அணுகு சாலை அருகே புலிக்கொரடு பகுதியில் லோடு லோடாக கொட்டுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக அளவில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை, ஒரு லாரியில் ரசாயன கழிவுகளை எடுத்து சென்று கொட்டினர்.
அப்போது, அப்பகுதியில் ஏற்கனவே புகை மூட்டம் இருந்துள்ளது. ஆனால், அதை கவனிக்காத ஓட்டுநரான, கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஜான்பாட்ஷா, 35, என்பவர், குப்பை கொட்டப்படும் பகுதிக்குள் சென்று லாரியை நிறுத்தினார்.
அப்போது, லாரியின் டீசல் டேங்கில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இந்த விபத்தில், லாரியின் பாதி பகுதி எரிந்து சாம்பலானது.
இது குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.