ADDED : ஜன 29, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு மகன் கண்ணன், 27. லாரி ஓட்டுனர்.
இவர் நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றிக் கொண்டு மாம்பாக்கச்சத்திரம் கிராமத்திற்கு சென்றார். அங்கு கிராவல் மண் கொட்டிவிட்டு திருத்தணி நோக்கி வந்தார்.
அதிகாலை, 3:30 மணிக்கு அகூர் நத்தம் அருகே தனியார் பள்ளி அருகே வந்த போது, திடீரென டிப்பர் லாரியின் முன்சக்கரங்கள் இரண்டும் கழன்று தனியாக சென்றதில், லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் கண்ணன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.