/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துவரை அறுவடை ஆர்.கே.பேட்டையில் துவக்கம்
/
துவரை அறுவடை ஆர்.கே.பேட்டையில் துவக்கம்
ADDED : பிப் 03, 2025 02:14 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மலைகள் அதிகளவில் அமைந்துள்ளன. மலைப்பாங்கான மேட்டு நிலங்களில் மானாவாரியில் துவரை, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
மானாவாரி பயிர்களில் தற்போது துவரை பயிரிடுவது அதிக லாபம் தருவதாக அமைந்துள்ளது. விதைப்பு மட்டும் செய்தால், தானாக வளர்ந்து பலன் தரக்கூடியது துவரை. பயிர் பாதுகாப்பு மற்றும் பாசனம், உரம் என, எந்தவித செலவும் இதில் இல்லை.
அதே நேரத்தில், துவரை ஒரு கிலோ, 140 - 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தை மாதத்தில் அறுவடைக்கு வரும் துவரையை விவசாயிகள் பக்குவமாக செம்மண் காப்பு இட்டு, ஆண்டு முழுவதுமான தேவைக்கு இருப்பு வைத்து பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தற்போது, ஆர்.கே.பேட்டை அடுத்த, மாக்மாம்பாபுரம், பீமரெட்டியூர் பகுதியில் மலைசார்ந்த வயல்களில் பயிரிடப்பட்டுள்ள துவரை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

