தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ போலீஸ்காரரை தாக்கிய இருவர் கைது

போலீஸ்காரரை தாக்கிய இருவர் கைது

போலீஸ்காரரை தாக்கிய இருவர் கைது


UPDATED : ஜூன் 27, 2026 06:34 PM

ADDED : ஜூன் 27, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 06:34 PM ADDED : ஜூன் 27, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை:லாரி மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவத்தில், போலீஸ்காரரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை பெரியகாலனியில் வசித்து வந்தவர் கலையரசன், 43. கூலித்தொழிலாளி. கடந்த, 25ம் தேதி இரவு, பைக்கில் சென்றபோது, லாரி மோதி பலியானார்.

இறந்தவர் உடலை எடுத்து செல்ல, அமரர் ஊர்தி வர காலதாமதம் ஆனது. இதனால், இறந்தவர் உடலை எடுத்து செல்வதில், போலீசார் மெத்தனமாக உள்ளதாக கூறி, உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த மோதலில், பெரியபாளையம் தனிப்பிரிவு போலீஸ்காரர் அருண்குமார் தாக்கப்பட்டார்.

இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பின், அமரர் ஊர்தி வந்த பின், போலீசார் கலையரசனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்காரர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், வடமதுரை பெரிய காலனியைச் சேர்ந்த சிவக்குமார், 25, ஜவகர், 40, ஆகியோரை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us