/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துக்க வீட்டில் வாலிபரை தாக்கிய இருவர் கைது
/
துக்க வீட்டில் வாலிபரை தாக்கிய இருவர் கைது
ADDED : ஆக 01, 2025 12:51 AM
மப்பேடு:மப்பேடு அருகே துக்க வீட்டில் நடந்த தகராறில் வாலிபரை தாக்கிய இருவரை மப்பேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மப்பேடு அடுத்த புதுார் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார், 29, இவர் கடந்த 29ம் தேதி நமச்சிவாயபுரம் பகுதியில் உறவினர் ஒருவர் துக்க வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு அவரிடம் நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் 28, மற்றும் நண்பர்களான லோகேஷ், 20, அபினேஷ், 23, ஆகாஷ், 24, ஆகிய நால்வரும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார் லோகேஷ், அபினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அருண், ஆகாஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.