/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாட்டுக்கோழிகள் திருட முயன்ற இருவர் கைது
/
நாட்டுக்கோழிகள் திருட முயன்ற இருவர் கைது
ADDED : ஜன 11, 2025 08:07 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையோரம், பழனி, 60, என்பவர், கோழிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், கடையை பூட்டிக் கொண்டு வெளியே சென்றவர் சற்று நேரத்தில், கடைக்கு திரும்பினார்.
அப்போது, இருவர், கோழி கூண்டின் பூட்டை உடைத்து அதிலிருந்த நாட்டுக்கோழிகளை திருடிக் கொண்டிருந்தனர். அதை கண்ட பழனி, இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
அவர்கள், ஆந்திர மாநிலம், புத்துார் பகுதியைச் சேர்ந்த மதன்குமார், 20, திருவள்ளூர் அடுத்த, கச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 17, என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருவர் மீதும் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

