ADDED : ஆக 30, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம் ஏரி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா, 25, ரியாஸ், 19, ஆகியோர், 1 கிலோ கஞ்சாவுடன் சிக்கினர். இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
