ADDED : செப் 07, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி, செப். 8–
கும்மிடிப்பூண்டி அருகே, 6 கிலோ கஞ்சா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் இருந்து இறங்கிய இருவர், நடந்தபடி சோதனைச்சாவடியை கடக்க முயன்றனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின், அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில், 6 கிலோ கஞ்சா சிக்கியது.
அவர்கள், நேபாளம் நாட்டை சேர்ந்த பைஜாநாத் மஹாட்டூ, 26, ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த திரிநாத் சுனா, 20, என்பது தெரியவந்தது.
வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
