அனுமதியின்றி கருவேல மரம் வெட்டி திருடிய இருவர் கைது
அனுமதியின்றி கருவேல மரம் வெட்டி திருடிய இருவர் கைது
ADDED : ஏப் 13, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 2 டன் கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டி, திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள ஏரியில் கருவேல மரங்கள் வெட்டப்படுவதாக, திருத்தணி வனச் சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி வனச்சரக அலுவலர் ராமச்சந்திரன், நேற்று முன்தினம் திருப்பாச்சூர் ஏரியிலிருந்து வெட்டப்பட்ட 2 டன் கருவேல மரங்களை கொண்டு வந்த டிராக்டரை பறிமுதல் செய்தார்.
மேலும், டிராக்டரில் வந்த திருப்பாச்சூர் கோட்டை காலனியைச் சேர்ந்த ஆடலரசு, 47, கண்ணன், 37, ஆகிய இருவரையும் பிடித்தனர்.
பின், பறிமுதல் செய்யப்பட்ட கருவேல மரங்களையும், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
