ADDED : மே 30, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32. ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் மாலை, கன்னிகாபுரம் நோக்கி ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திருத்தணி அடுத்த எட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய், 28, அரக்கோணம் வேடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 33, ஆகிய இருவரும், ஆட்டோவை நிறுத்தி, கார்த்திக்கிடம் இருந்த, 500 ரூபாயை பறித்து தப்பினர்.
இது குறித்து, கார்த்திக் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட இருவரையும் நேற்று கைது செய்தனர்.
