ADDED : செப் 20, 2026 04:22 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை, செப். 21-–
சுடுகாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் சுடுகாட்டில், சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
இதில், சந்திரவிலாசபுரத்தை சேர்ந்த கோவிந்தா, 51, திருமால், 49, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ரகு, 40, போத்து, 39. ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
