ADDED : மார் 26, 2026 06:24 PM

திருத்தணி: கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் அதிகளவில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இவை, திருத்தணி வழியாக திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது.
இதையடுத்து, திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று திருத்தணி பெரியார் நகரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, இந்திரா நகர் தாமரைக்குளம் பகுதியில் பதுக்கியிருந்த இரு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்களிடம், 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெரியார் நகரைச் சேர்ந்த சுசில், 25, ஆந்திர மாநிலம் வேப்பகுண்டாவைச் சேர்ந்த தீபக், 23, ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
