தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது

 வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது

 வழிபறியில் ஈடுபட்ட இருவர் கைது


ADDED : ஜூன் 21, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, வடமாநில தொழிலாளியை வழி மறித்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித், 29. கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தில் வசித்தபடி, சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம் 24ம் தேதி இரவு, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள், அஜித்தை வழி மறித்து, அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், வழிபறியில் ஈடுபட்ட எளாவூர் மதன், 21, கிரிதரன், 23, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us