ADDED : பிப் 13, 2026 05:18 AM
அ நிறம் | அளவு
பெரம்பூர்: இரவில் டீ விற்பனையில் ஈடுபட்ட வாலிபரிடம், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டேரி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 25. இவர், பெரம்பூர் அகரம் வீனஸ் பகுதியில், இரவு வேளையில் டீ, காபி, பிஸ்கட் உள்ளிட்டவற்றை தன் இருசக்கர வாகனத்தில் வைத்து விற்று வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வந்த இருவர் டீக்கு பணம் தராததோடு, ஆகாஷிடம் இருந்த 1,500 ரூபாயையும் பறித்துள்ளனர். மேலும், அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த ஷியாம் என்பவரது மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
