/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜே.சி.பி., ஓட்டுநரிடம் வழிப்பறி: இருவர் கைது
/
ஜே.சி.பி., ஓட்டுநரிடம் வழிப்பறி: இருவர் கைது
ADDED : நவ 10, 2025 11:03 PM
பொதட்டூர்பேட்டை: இரவில் தனியே நடந்து சென்ற ஜே.சி.பி., ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் யாதவேந்தரா, 49. இவர், ஜே.சி.பி., ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து ராமாபுரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு மர்ம நபர்கள், இவரை தடுத்து நிறுத்தினர். பின், அவரிடம் இருந்த 7,400 ரூபாயை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக, பொதட்டூர்பேட்டை போலீசார், அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த சிரஞ்சீவி, 28, ஹரீஷ், 25, ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

