ADDED : ஆக 17, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் மற்றும் மப்பேடு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் மணவாளநகர் போலீசார், கொப்பூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார், 24, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், மப்பேடு அடுத்த சத்தரை பகுதியில், போலீசார் நடத்திய சோதனையில், ராணிப்பேட்டை மாவட்டம் சகாயதோட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், 22, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.