ADDED : அக் 14, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை : பென்னலுார்பேட்டை அருகே, அல்லிக்குழி கிராமத்தில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பென்னலுார்பேட்டை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பைக்கில் இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்தனர்.
போலீசார் அவர்களை சோதனை செய்தனர். இதில் அவர்களிடம், 50 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது.
அவர்கள் கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ், 22, கோகுல், 23 என்பது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.