ADDED : ஆக 24, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
திருத்தணி, ஆக. 25–
திருத்தணி அடுத்த மேல்திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 56. இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று, பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட ‘ஹான்ஸ்’ பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, கடையில், 20 ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், சங்கர், அவரது சகோதாரர் சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
