/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'கார் ஷெட்'டுக்கு தீ வைத்து கொளுத்திய இருவர் கைது
/
'கார் ஷெட்'டுக்கு தீ வைத்து கொளுத்திய இருவர் கைது
'கார் ஷெட்'டுக்கு தீ வைத்து கொளுத்திய இருவர் கைது
'கார் ஷெட்'டுக்கு தீ வைத்து கொளுத்திய இருவர் கைது
ADDED : பிப் 27, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் வீரா, 26. இவர், அதே பகுதியில் 'கார் ஷெட்' அமைத்து, கார் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணி என்ற ஆட்டோ மணி, 27, மகேஷ், 48, ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி நள்ளிரவில் மணி, மகேஷ் ஆகிய இருவரும் கார் பழுது பார்க்கும் கூடாரத்தை தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பினர். இதில், காரின் உதிரிபாகங்கள், பழுது பார்க்கும் கருவிகள் தீயில் கருகின. விசாரித்த திருவாலங்காடு போலீசார், தலைமறைவாக இருந்த மணி, மகேஷை நேற்று கைது செய்தனர்.