தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாடுகளை ஆட்டோவில் கடத்திய இருவர் கைது

மாடுகளை ஆட்டோவில் கடத்திய இருவர் கைது

மாடுகளை ஆட்டோவில் கடத்திய இருவர் கைது


UPDATED : ஜூலை 04, 2026 10:30 PM

ADDED : ஜூலை 04, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 10:30 PM ADDED : ஜூலை 04, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: வெள்ளானுார் அருகே, சாலையில் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மாடுகளை கசாப்பு கடைக்கு ஆட்டோவில் கடத்தி சென்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அடுத்த, திருமுல்லைவாயில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ், 38; மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

ஜூலை 3 இரவு, இவரது இரண்டு பசு மாடுகள், வெள்ளானுார், ஆர்ச் அந்தோணியார் நகர் அருகே சாலையில் மேய்ந்து கொண்டிருந்தன.

அங்கு வந்த மர்ம நபர்கள், மாடுகளை கயிற்றால் கட்டி ஆட்டோவில் ஏற்றினர். அதை கவனித்த ராஜேஷ் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் மாடுகளை கடத்தி ஆட்டோவில் தப்பினர்.

இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு, மொபைல் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார், ஆட்டோவை துரத்தி பிடித்து மாடுகளை மீட்டனர்.

சோழவரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 31, பாலாஜி, 31, என்பதும், கசாப்பு கடைக்காக மாடுகளை கடத்தியதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. போலீசார், அவர்களை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்; பாலாஜி மீது ஏற்கனவே, மாடு திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us