ADDED : ஏப் 13, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பகுதியில், கலால் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஆட்டோ நிறுத்தம் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.
அதில், எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஆந்திராவில் இருந்து சர்கார் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன், 20, தனுஷ், 23, ஆகியோரை கைது செய்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரிக்கின்றனர்.

