ADDED : ஜன 23, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக எஸ்.பி., விவேகானந்த சுக்லாவிற்கு தகவல் கிடைத்தது.
தனிப்படை எஸ்.ஐ., எரோமியாஸ் ஆண்டனிராஜ் மற்றும் போலீசார் திருத்தணி- அரக்கோணம் நெடுஞ்சாலை வள்ளியம்மாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையில், 2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஜனகராஜகுப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமார், 25, வள்ளியம்மாபுரம் ஓம்பிரகாஷ்,29, என தெரிய வந்தது. பின் இருவரையும் கைது செய்தனர்.
