/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராவல் மண் கடத்திய இருவர் கைது
/
கிராவல் மண் கடத்திய இருவர் கைது
ADDED : பிப் 22, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:அரசு அனுமதி இன்றி, பாலாபுரம் அருகே கிராவல் மண் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கே பதிவெண் இல்லாத டிராக்டரில் ஒரு யூனிட் மண்ணும், டி.என் 23ஜெ 5013 என்ற லாரியில் நான்கு யூனிட் மண்ணும் கடத்தி செல்வது தெரிந்தது.
அந்த வாகனங்களை மடக்கி பிடித்து கைப்பற்றிய போலீசார், ஓட்டுனர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.