ADDED : ஜன 04, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த, 'ஹோண்டா ஆக்டிவா' டூ - -வீலரை நிறுத்தி சோதனையிட்டனர். டூ- - வீலரில் இருந்த மூன்று பைகளில், 18 கிலோ எடை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதை கடத்திய, சென்னை, கிண்டி அடுத்த, மடுவங்கரையைச் சேர்ந்த முருகன், 52, ராணி, 53, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

