ADDED : செப் 03, 2026 07:32 PM
திருவாலங்காடு, செப். 4–
கனகம்மாசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில், 10 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கனகம்மாசத்திரம் வழியாக, குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று நெடும்பரம் பேருந்து நிறுத்தம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த ‘ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்’ இருசக்கர வாகனத்தை, போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 10 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குட்கா பொருட்களை கடத்தி வந்த, பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோசீம் ஷெரிப், 40, குருசாமி செல்வம், 53, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
