தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது


UPDATED : அக் 14, 2026 09:50 PM

ADDED : அக் 14, 2026 09:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 09:50 PM ADDED : அக் 14, 2026 09:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணியில், பேருந்தில் 12 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுவதாக, திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, போலீசார் பொன்பாடி சோதனைச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் சோதனை செய்தனர்.

அதில் பயணித்த, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி 47, அரக்கோணம் தாலுகா பள்ளியங்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வம், 29, ஆகியோர், 12 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us