/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல்: ரயிலில் கடத்திய இருவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல்: ரயிலில் கடத்திய இருவர் கைது
மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல்: ரயிலில் கடத்திய இருவர் கைது
மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல்: ரயிலில் கடத்திய இருவர் கைது
ADDED : பிப் 02, 2026 04:57 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கெண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்களின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அவர்களிடம், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 62 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதை, ரயில் மூலம் பெங்களூரில் இருந்து கடத்திய சேலம் மணிகண்டன், 26, கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த முகமது நயிம், 22, ஆகியோரை கைது செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.