ADDED : அக் 24, 2024 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 37. அவருக்கு சொந்தமான காரை மாருதி ஷிப்ட் டிசைர் இம்மாதம் 14ம் தேதி இரவு, வீட்டின் அருகே பூட்டி உள்ள, பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்திருந்தார்.
அன்று இரவு மர்ம நபர்கள் காரை திருடி சென்றனர். புகார்படி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். கார் திருட்டில் ஈடுபட்ட, பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தை சேர்ந்த சத்தியா, 23, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தை சேர்ந்த நேதாஜி, 27, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

