தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது


ADDED : அக் 08, 2024 10:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 10:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் பகுதியில் திருவள்ளூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் சுசீலா மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மேட்டுத்தெரு அருகே வந்த டிரெய்லருடன் வந்த டிராக்டரை நிறுத்தும்படி சைகை செய்தனர்.

இதையடுத்து டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பியோட முயன்ற இருவரை திருவள்ளூர் தாலுகா போலீசார் பிடித்தனர்.

பின் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 55, துளசி, 37 எனவும் அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருடி வந்ததும் தெரிந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து அரை யூனிட் ஆற்று மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us