/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடியில் ரூ.1.5 கோடி நிலம் மோசடியில் இருவர் கைது
/
ஆவடியில் ரூ.1.5 கோடி நிலம் மோசடியில் இருவர் கைது
ADDED : ஜன 10, 2024 11:30 PM
ஆவடி:அம்பத்துாரை சேர்ந்தவர் ராஜாராம், 61. இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டிருப்பதாவது:
கொரட்டூர், ஸ்ரீமூகாம்பிகை நகரில் என் பெயரில், 4800 சதுர அடி நிலம் இருந்தது.
அந்த நிலத்தின் ஒரு பகுதியை 2021 ல் விற்று, மீதமுள்ள நிலத்தில் கட்டடம் கட்ட வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்தேன்.
அப்போது, என் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, போலியான ஆவணங்கள் தயார் செய்து, கொரட்டூரைச் சேர்ந்த விஜி என்பவர், என் தங்கை எனக்கூறி அவரது பெயரில் செட்டில்மென்ட் செய்தது தெரிந்தது.
இந்த நிலத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாய். நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், பூஞ்சோலை, பிரேம் குமார், 36, ஆகியோரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.