ADDED : ஏப் 18, 2026 10:25 PM
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அருகே பள்ளி காவலாளி கொலை வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல், 59. கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் தனியார் பள்ளியில் வசித்தபடி காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை, பள்ளியில் அவர் வசித்து வந்த அறையின் வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில், பழனிவேல் இறந்து கிடந்தார்.
கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கொலையில் தொடர்புடைய, தச்சூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சன், 21, மணிகண்டன், 25, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், 16ம் தேதி இரவு, மது போதையில் பள்ளிக்குள் சென்ற இருவரும், மது குடிக்க பழனிவேலிடம் பணம் கேட்டனர். அவர் தர மறுத்ததால், அவரை சரமாரியாக தாக்கினர்.
பின், தற்காப்புக்காக, சுத்தியலால் பழனிவேல் தாக்கியதில், ஜான்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் உருட்டு கட்டை மற்றும் சுத்தியலால், பழனிவேலை தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
