ADDED : மார் 15, 2024 07:58 PM
அ நிறம் | அளவு
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மஞ்சூர்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் பாலமுருகன், 44. இவரது மனைவி கலைச்செல்வி, 35. கணவன், மனைவி இடையே கருத்து வேறு பாடு இருந்தது.
பாலமுருகன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து நகை, பணம் வரதட்சணையாக கொண்டு வர வேண்டும் என, கொடுமைப்படுத்தினார். இதற்கு உடந்தையாக பாலமுருகன் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் அன்பழகன் ஆகியோர் செயல்பட்டனர்.
இது குறித்து கலைச்செல்வி திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகார்படி போலீசார் வழக்கு பதிந்து பாலமுருகன், 44, அவரது சகோதாரர் அன்பழகன், 41, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், பாலமுருகன் பெற்றோர் கன்னியப்பன், ஜெயா ஆகியோர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
