ADDED : ஜூலை 06, 2026 03:42 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, நேற்று, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகம் ஏற்படும்படி நடந்து சென்ற இருவரிடம் விசாரித்தனர்.
அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், 1,900 போதை மாத்திரைகள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை வைத்திருந்த, சென்னை அம்பத்துார் பகுதியை சேர்ந்த ராஜசேகர், 27, பெரியபாளையம் பகுதியை சேர்ந்த வரதராஜன், 23, ஆகியோரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
