/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவையில் இரண்டு நாள் ஜவுளி பயிலரங்கு கூட்டம்
/
கோவையில் இரண்டு நாள் ஜவுளி பயிலரங்கு கூட்டம்
ADDED : ஜன 31, 2024 11:52 PM
திருவள்ளூர்:கோவையில், நாளை முதல் 2 நாட்கள் ஜவுளி தொழில்நுட்ப பயிலரங்கு கூட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், ஜவுளி தொழில் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஜவுளி தொழில் முனைவோருக்கு, தற்போதைய நிலவரம் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய நுண்ணறிவை பெறும் வகையில், நாளை மற்றும் நாளை மறுநாள், கோயம்புத்துார் ஹோட்டல் ஜென்னிஸ் ரெசிடென்சியில் தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்தான பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது.
பயிலரங்கில் தொழில்நுட்ப ஜவுளி தொழில் சார்ந்த வாய்ப்புகள், வளர்ச்சி வாய்ப்புகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் உலகளாவிய போக்குகள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இதில், தொழில்நுட்ப ஜவுளித் துறை வல்லுனர்கள், சிறப்பு ஜவுளி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்பர். இதன் மூலம் தமிழகத்தில் தொழில்நுட்ப ஜவுளித் துறை சிறப்பான வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.